விரைவில் பல ரேஷன் அட்டையை அரசானது ரத்துசெய்ய போகிறது. நாடு முழுவதும் பல லட்சம் பேரின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசிடமிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. அதன்படி தற்போது நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் வசதி கிடைக்காது. ஆகவே இதன் சமீபத்திய புதுப்பிப்பை இங்கு தெறிந்துகொள்வோம். நாட்டில் சுமார் 10 லட்சம் பேர் இலவச ரேஷன் திட்டத்தினை பயன்படுத்தி மோசடி செய்து வருவதாக அரசு தெரிவித்து உள்ளது. இவர்களின் பட்டியலும் துறையால் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே இனிமேல் இவர்கள் அனைவரின் ரேஷன் அட்டைகளும் ரத்துசெய்யப்படும். இதன்கீழ் சுமார் 10 லட்சம் பேரின் ரேஷன் அட்டைகள் குறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. NFSA-ன் படி கார்டை வைத்திருப்பவர்கள் மற்றும் வருமானவரி செலுத்துபவர்கள் (அ) 10 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படும். மேலும் அவர்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் இலவச ரேஷனை பெற்று வணிகம் செய்யும் பல்வேறு கார்டுதாரர்கள் இருக்கின்றனர். இதனால் அவர்களின் ரேஷன் அட்டையானது ரத்து செய்யப்படுமென அரசு தெரிவித்துள்ளது.