நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக தொண்டரின் திருமணத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓபிஎஸ் தினகரனை சந்திப்பது ஒன்றும் புதிது இல்லை. அதிமுகவில் 99 சதவீதம் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டனர்.
இன்றைக்கும் அதிமுக கழகம் வலுவாக உள்ளது. ஒரு சதவீதம் கூட தொண்டர்கள் இல்லாத ஓபிஎஸ் எப்படி பொதுக்குழுவை நடத்த முடியும். அப்படி நடத்தினால் அது பொதுகுழு அல்ல பொய் குழு. ஓபிஎஸ் கம்பெனிக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்திருக்கிறார். ஓபிஎஸ் கட்சி இல்லை நிறுவனம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.