விஷ்ணு விஷாலின் புதிய திரைப்படம் குறித்த தகவலை தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தில் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாரிப்பாளர் சத்திய ஜோதி தியாகராஜன் கூறியுள்ளதாவது, வெண்ணிலா கபடி குழு வெளியான சமயத்திலேயே விஷ்ணு விஷாலை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தோம். அதன் பிறகு ராட்சசன் திரைப்படத்தை பார்த்த பின்பு எப்படியேனும் அவரை வைத்து படம் தயாரித்து ஆகவேண்டும் என முடிவெடுத்தோம். தற்போது எங்களது தயாரிப்பில் அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிக்க இருக்கின்றார். மேலும் அந்த திரைப்படத்தை ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்குகின்றார் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.