Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் குடும்பத்தை பாருங்க…! ரசிகர்களுக்கு விஜய் சொன்ன அட்வைஸ்…!!!!

5 ஆண்டுகள் கழித்து தனது ரசிகர்களை நடிகர் விஜய் நேற்று  பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார். சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் விஜய் சந்தித்து பேசினார். இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விஜய் கேட்டு தெரிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய், அனைவரையும் நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ரசிகர்கள் கூறும்போது, கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் முறையை தவிர்க்க வேண்டுகோள் விடுத்ததோடு, முதலில் குடும்பத்தை பாருங்கள், அடுத்து நலத்திட்ட உதவிகளில் கவனம் செலுத்தவும் கூறியுள்ளார்.

Categories

Tech |