தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் நேற்று முன்தினம் தன்னுடைய 45-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
இவர் ஆதரவற்ற இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியதோடு அந்த குழந்தைகளுக்கு சாப்பாடும் ஏற்பாடு செய்தார். அதோடு குழந்தைகளுடன் சேர்ந்து தானும் மதிய உணவை சாப்பிட்டார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அருண் விஜய் ரத்த தானம் செய்தார். இவருடன் சேர்ந்து அருண் விஜயின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் ரத்த தானம் செய்தார்கள்.மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அருண் விஜயின் சேவையை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.