நேபாளத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், மக்கள் காலை முதலே வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு ஆரம்பமானது. இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழு மாகாணங்களில், வாக்களிக்க தகுதி உடையவர்கள் சுமார் ஒரு கோடியே 79 லட்சம் பேர்.
உறுப்பினர்கள் 275 பேரில் 165 நபர்கள் நேரடியாக வாக்கு செலுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமிருக்கும் 110 நபர்கள் விகிதாச்சார மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதேபோன்று மொத்தமாக இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களில் 550-ல் 330 பேர் நேரடி முறையிலும், 220 நபர்கள் விகிதாச்சார முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அங்கு ஆளும் நேபாள காங்கிரஸ் கூட்டணி கட்சியானது வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் தொங்கு நாடாளுமன்றமும் அமைய வாய்ப்பிருக்கிறது எனவும் தகுந்த அரசியல் ஸ்திரத்தன்மையை அளிக்க வாய்ப்பு கிடைக்காத அரசாங்கம் அமையலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது.