பொதுமக்கள் தனியார் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம்மாபட்டி பகுதியில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சரியாக நின்று செல்லாததால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 17-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தனியார் பேருந்து ஒன்று தங்கம்மாபட்டியில் நிற்காமல் சென்றதால் கோபமடைந்த பொதுமக்கள் அந்த பேருந்தை சிறைபிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேருந்து நிர்வாகத்தினர் எப்போதும் போலவே தங்கம்மாபட்டியில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாக உறுதியளித்த பிறகு பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.