டெக்னாலஜியின் வளர்ச்சி அதிகரிப்பது ஆரோக்கியமாக உள்ளபோதிலும், மக்களின் அன்றாட செயல்களையே அவை பாதிக்கும் போது தான் பிரச்சினையே எழுகிறது. முன்னோர் காலத்தில் இணையம் என்பது ஆடம்பரமாகவும், வசதிபடைத்தவர்களும் பயன்படுத்தும் நிலையில் இருந்தது. தற்போது ஸ்மார்ட்போன்களின் வருகையினால் உணவு கூட இன்றி இருந்துவிடும் இளம் வயதினர் இணையம் இல்லாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது என அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அந்த வரிசையில் ஸ்மார்ட்போன்களும் இப்போது இணைந்து உள்ளது. அதன்படி பணவீக்கத்தினால் மக்கள் இடையே ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மோகம் குறைந்து உள்ளது என டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் நடத்திய ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது. 2022-2023 ஆம் நிதி ஆண்டின் 2ஆம் காலாண்டில் மக்களுக்கு 10 சதவீத ஸ்மார்ட் போன்களின் மீதான மோகம் குறைந்து 4.3 கோடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்பே பொருளாதார மந்த நிலையால் ஐடி துறை பாதிக்கப்பட்டு பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.