Categories
உலக செய்திகள்

காட்டில் வேட்டைக்கு சென்ற முதியவர் மாயம்… போலீஸ் நாய்க்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

வேட்டைக்குப் போன முதியவரை கண்டுபிடித்துக் கொடுத்த நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தில் வழக்கம்போல் 80 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டுப் பகுதியில் வேட்டையாட  சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.  இந்நிலையில் தான்ஆபத்தில் இருப்பதை தெரிவிக்கும் வகையில் முதியவர்  மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட முதியவரின் மனைவிபோலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காணாமல் போன முதியவரை தேடும் பணியில் களம் இறக்கப்பட்ட கே-9 லோகி என்னும் போலீஸ் நாய் நீண்ட நேர தேடுதலுக்கு பின் ஆசேபில் எனும் ஆற்றின் கரையோரம் முதியவரை கண்டுபிடித்துள்ளது. இதனையடுத்து அந்த முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வேட்டைக்கு சென்றபோது காணாமல் போன முதியவரை கண்டுபிடித்ததற்காக அந்த நாய்க்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

Categories

Tech |