மக்களுக்கு என்ன தேவையோ அதை உணராமல் ஆட்சி செய்ய நினைப்பது எதற்காக என்று சமக தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாமக்கலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்த சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் , ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று உறுதியாக சொல்லாத நிலையில் ஊடகங்கள் அதை பெரிது படுத்துகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாத சிலர் போராட்டம் நடத்துகின்றனர். இந்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
சட்டத்தில் முரண்பாடான விஷயங்கள் இருந்தால் அதை அரசிடம் கோரிக்கையாக முன்வைத்து சரிசெய்து கொள்ளலாம். அரசியல் கட்சிகள் ஆண்டாண்டு காலமாக வைத்துள்ள தொண்டர்களை நம்பாமல் கார்ப்பரேட் கம்பெனியை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்க தேவையில்லை. மக்களுக்கு என்ன தேவை என்பதை உணராமல் ஆட்சி செய்ய நினைப்பது எதற்காக என்று சரத்குமார் கேள்வி எழுப்பினார்.