Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்து மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது  உயர்ந்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டிய நமது தமிழகம் அதற்கான நடவடிக்கைகளை கொஞ்சம் கூட எடுக்காதது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்நிலையில் தமிழ் நாட்டில் இந்த  திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை.

ஏனென்றால் பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அரசின் பங்களிப்பு தொகையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் நமது தமிழ்நாட்டில் பிடித்தம் செய்யப்படும் தொகை தனி கணக்கின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த நிதியை அரசின் கணக்குக்கு மாற்றிக் கொள்வதில் எவ்வித தடையும் இல்லை. எனவே நமது தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை தாமதப்படுத்தாமல்  அமல்படுத்த வேண்டும் என அவர் அந்த அறிக்கையில்  கூறியுள்ளார்.

Categories

Tech |