மலையாள சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் ஷகீலா. 1990-களின் காலகட்டத்தின் போது ஷகிலா நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தியது. முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக ஷகிலாவின் படங்களும் வசூல் வேட்டை நடத்தியதால் மறைமுகமாக ஷகிலாவின் படங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய ஷகிலா தமிழ் சினிமாவில் காமெடி ரோல்களில் நடித்து வந்தார்.
இவர் தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஷகிலா கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்ட ஷகிலாவின் ரசிகர்களும் அவரை காண்பதற்காக மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் நிகழ்ச்சி நடைபெற இருந்த வணிக வளாக நிர்வாகிகள் ஷகிலா கலந்து கொள்ள கூடாது எனவும், ஷகிலா இல்லாமல் தான் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் எனவும் கூறிவிட்டனர்.
இதன் காரணமாக படக்குழுவினர் ஷகிலா இல்லாமல் விழாவை நடத்தக்கூடாது என முடிவு செய்து அந்த விழாவையே ரத்து செய்து விட்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் நடிகை ஷகிலா தன்னை நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என்று கூறியது வருத்தம் அளிப்பதாகவும்,435 என்னுடைய ரசிகர்களை நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பதற்காக மிகவும் ஆர்வமாக இருந்தேன் என்றும் கூறியுள்ளார்.