Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு மற்றும் வங்க கடல் நோக்கி நகர்கிறது. அதன் பின்னர் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களை நோக்கி நகரக்கூடும். மேலும் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என அந்த அறிக்கைகள் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மிக பலத்த மழைக்காக வழங்கப்பட்ட எச்சரிக்கை அறிவுரை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |