கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தந்தையே தன்னுடைய மகனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தன்னுடைய 6 வயது மகனை தந்தை கொன்றுள்ளார். இது பற்றி மும்பை காவல்துறை அதிகாரி கூறியதாவது, நந்தன் என்பவர் தன்னுடைய மனைவி சுனிதாவுடன் சண்டை போட்டுள்ளார். அதன் பின் தன்னுடைய மகன் லக்ஷ்யாவை கொலை செய்துள்ளார். அதாவது நேற்று காலை சுனிதா வழக்கம் போல் தன்னுடைய 13 வயது மகளை பள்ளியில் விடுவதற்காக சென்றுள்ளார்.
அதன் பின் சுனிதா வீடு திரும்பியபோது, கூர்மையான பொருளால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் லக்ஷ்யா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நந்தனை கைது செய்துவிசாரணை நடத்தியபோது, அவர் தனது மகனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.