Categories
தேசிய செய்திகள்

போன் பே காப்பீடு திட்டம்: என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

போன் பே எனும் டிஜிட்டல் கட்டண சேவை தன் வாடிக்கையாளர்களின் நலன் கருதி  பல வகையான காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. கடந்த 2016 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் கட்டண சேவையை பல பேர் பயன்படுத்துகின்றனர். போன் பே செயலி அறிமுகமாகிய அடுத்த வருடத்திலேயே 10 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று முன்னணி செயலியாக விளங்கியது. போன் பே 2020ம் வருடத்தில் ஆயுள்காப்பீடு, மருத்துவகாப்பீடு, பயணக்காப்பீடு, மோட்டார் காப்பீடு ஆகிய பல காப்பீட்டு விருப்பங்களை அறிமுகப்படுத்தியது. போன் பே வழங்கும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் பங்களிக்கும் பாலிசிதாரர் 1 ஆண்டு பாலிசி காலத்தின்போது இறந்து விட்டால் அவரது நாமினிக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இவற்றில் நீண்டகாலம் பிரீமியம் செலுத்த விரும்பாதவர்கள் 1 வருடம் காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்து பயன் பெறலாம்.

மருத்துவ காப்பீட்டை பொறுத்தவரையிலும் பாலிசிதாரர் இத்திட்டத்தை வாங்கினால், அவர்களுக்கு ஏதேனும் நோய் (அ) காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களின் மருத்துவ செலவை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் சரி செய்யும். போன் பே வாயிலாக வழங்கப்படும் இத்திட்டத்தை காகிதம் இல்லா வழிமுறைகள் மூலம் வாங்கலாம். இத்திட்டத்தில் சிகிச்சைக்கான செலவு, ஐசியூ கட்டணம் மற்றும் ஆம்புலன்ஸ் கட்டணம் ஆகியவை அடங்கும். அத்துடன் போன் பே செயலி இந்தியாவுக்குள் பயணம் செய்பவர்களின் எதிர்பாராத செலவுகளை பூர்த்திசெய்யும் அடிப்படையிலான உள் நாட்டு காப்பீடு, பைக் காப்பீடு மற்றும் காருக்கு காப்பீடு என மோட்டார் வாகனங்களுக்கும் காப்பீட்டு நன்மைகளை வழங்குகிறது.

Categories

Tech |