மும்பை ஐஐடி கரக்பூரில் பயின்றுவிட்டு முன்னணி நிறுவனத்தில் சீனியர் துணைத்தலைவராக இருந்தவர் அன்கிட் ஜோஷி. இவர் பல லட்சங்களை சம்பளமாக பெற்றுவந்தார். பேட்டர்னிட்டி விடுமுறை காலம் போதாத காரணத்தால் அதிக சம்பளம் பெறும் தனது வேலையையே அன்கிட் ஜோஷி ராஜினாமா செய்திருக்கிறார். இதுகுறித்த தகவல் இப்போது யுமன்ஸ் ஆப் பாம்பே என்ற தளத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு வாயிலாக தெரியவந்திருக்கிறது.
இதில் அன்கிட் ஜோஷி, ஆகான்ஷா தம்பதியினருக்கு அண்மையில் ஸ்பிதி என பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஸ்பிதியை கவனித்துக்கொள்ள ஆகான்ஷா மெட்டர்னிட்டி விடுமுறையில் இருந்தாலும், தானும் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என எண்ணி வேலையை அன்கிட் ஜோஷி ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆகவே குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இணையாக தந்தைகளுக்கு உரிய மகப்பேறு விடுப்பு எதிர்காலத்திலாவது கொடுக்கவேண்டும் என வலியுறுத்தி மூத்த துணைத்தலைவராக இருந்த தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு செல்ல மகளை பார்த்துக் கொள்கிறார் ஐ.ஐ.டி. கரக்பூர் பட்டதாரி அன்கிட் ஜோஷி.