தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்குனர் செல்ல ஐய்யாவு இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”கட்டா குஸ்தி”. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இந்த திரைப்படம் இரு மொழிகளில் ரிலீசாக உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. படக்குழு இதனை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
After the success of #FIR, we’re happy to join hands with @TheVishnuVishal again. #GattaKusthi releasing on Dec 2nd, in cinemas near you.@VVStudioz @RaviTeja_offl @RTTeamWorks #AishwaryaLekshmi @ChellaAyyavu @Richardmnathan @justin_tunes @editor_prasanna @anbariv @thanga18 pic.twitter.com/TVoagmqtsa
— Red Giant Movies (@RedGiantMovies_) November 18, 2022