Categories
தேசிய செய்திகள்

ஆக்ராவில் கட்டணமின்றி ஒரு நாள் சுற்றுப்பயணம்….. அசத்தல் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…..!!!!

உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் தொல்லியல் துறையால் பாரம்பரியமான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட சுற்றுலா தளங்களுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி உள்ளிட்ட பல நினைவு சின்னங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு கழிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால் தாஜ்மஹாலை பொருத்தவரை நுழைவு வளாகத்திற்குள் நுழைவதற்கு மட்டும் தான் கட்டணம் கிடையாது. மற்றபடி அங்குள்ள முக்கிய இடத்தை பார்ப்பதற்கு ரூபாய் 200 கட்டணமானது செலுத்த தான் வேண்டும். இந்நிலையில் ஆக்ராவில் உள்ள பல சுற்றுலா தளங்களுக்கு சில நூறு ரூபாய்கள் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் ஒரு நாள் சுற்றுலா பயணத்தை திட்டமிடுபவர்களுக்கு தொல்லியல் துறையின் அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |