Categories
மாநில செய்திகள்

“மீண்டும் சூடு பிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு”…. 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை….‌ கோர்ட் அதிரடி…!!!!

அமைச்சர் கே.என் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவருடைய உடல் கல்லணை செல்லும் பகுதியில் உள்ள பொன்னி டெல்டா என்ற பகுதியில் கைப்பற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 12 தனி படைகள் அமைத்தும், சிபிஐக்கு வழக்கை மாற்றியும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் சந்தேகத்திற்கு இடமாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தற்போது உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், மீதி 4 பேர் ஒப்புக்கொள்ளவில்லை. அதோடு வழக்கில் கைதான சில குற்றவாளிகள் ராமஜெயத்தின் குடும்பத்தாரிடமும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 12 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை தற்போது நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த சோதனையின் முடிவுகள் நவம்பர் 21-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. ‌

Categories

Tech |