அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் பொருளாளராகவும் இருந்து வரும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென்று நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய குடும்பத்தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை மேற்கொண்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பதை கண்டறியப்பட்டது. தற்போது திண்டுக்கல் சீனிவாசன் நலமுடன் இருப்பதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Categories
திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி…. என்னாச்சி அவருக்கு….? வெளியான தகவல்….!!!
