தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் அண்மையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்க, நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான ஊஞ்சல் மனமே ஆடும் போன்றவைகள் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் லத்தி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை பட குழுவினர் ஒரு போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர். அதன்படி டிசம்பர் 22-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் லத்தி படத்தின் புதிய போஸ்டர் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
#Laththi in Cinemas this Christmas 2022 !#LaththiCharge #Laatti #LaththiFrom22ndDec pic.twitter.com/toXvfmQHij
— Vishal (@VishalKOfficial) November 18, 2022