காதல் என்பது இரு உடல்களுக்கிடையில் இல்லை, இரு மனங்களினுடயது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது கேரளாவில் ஒரு திருமணம்.
திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்த பிரணவ் (27) என்ற இளைஞர் அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்துள்ளார். ஆனால் ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் சிக்கிய பிரணவ்வால் அதன்பிறகு எழுந்து நடமாட முடியாத நிலை. எப்போதும் வீல்சேரிலேயே அவரது வாழ்க்கை முடங்கியது.
இதனால் தனது வாழக்கையை வீல்சேரில் அமர்த்தவாறு வாழ்ந்துவந்த இவர், அதனை நினைத்து ஒருபோதும் வருந்தியதில்லை. பிரணவ் எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர். இவர் திருவிழா, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வீடியோ, போட்டோ போன்றவற்றை வலைதளங்களில் பதிவேற்றி வந்துள்ளார். இது வைரலாகவும் மாறியுள்ளது.
திருவனந்தபுரத்தை சேர்ந்த சஹானா என்ற இளம் பெண் பிரணவ்விற்கு முகநூலில் பிரென்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். பின்னர் பிரணவ்வின் தொலைபேசி எண்ணை எடுத்து அவரிடம் பேச தொடங்கியுள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் ஒருகட்டத்தில் சஹானா பிரணவ்வை காதலிப்பதாக கூற, அதற்கு பிரணவ் மறுத்துள்ளார். ஆனாலும் சஹானா விடுவதாக இல்லை. தனக்கு வேறொரு காதல் இருப்பதாக நண்பர்கள் மூலம் சஹானாவிடம் கூற வைத்துள்ளார் பிரணவ்.
ஆனாலும் தனது காதலை விட்டுக்கொடுப்பதாக இல்லை சஹானா. ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இருவரின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவர இருவர் வீட்டில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கையில் 500 ரூபாய் பணத்துடன் சஹானா வீட்டில் இருந்து கிளம்பி, பிரணவ் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனை அடுத்து நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
love is not between two bodies, its between two minds 😘
CongratZ Pranav & Sahana 💐
♥️https://t.co/wjBUokKvCV#Love4Ever #love pic.twitter.com/MqhtF42cxp
— ᴛʜᴇ ᴄᴏᴍᴍᴏɴ ᴍᴀɴ (@Nanthivarman_) March 6, 2020
தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு ஏராளமான நபர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து பேசிய பிரணவ், என்னுடைய அவஸ்தை எனக்குத் தெரியும். அதை அவளிடம் பலமுறை எடுத்துச்சொல்லிட்டேன். இருந்தும் அவள் கேட்கவில்லை என விவரிக்க தொடங்கினார்.
எனது பெண் நண்பர்கள் மூலம் எனக்கு வேறு ஒரு காதல் இருக்கிறது என்றுகூறி அவளை திசைதிருப்ப முயற்சி செய்தேன். அது சரிப்பட்டு வரவில்லை. பின்னர் எனது நண்பர்கள் மூலம் நிலைமையை எடுத்துச் சொன்னேன். அவர்கள் மூலம் அவளை திட்டியும் பார்த்தேன். ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத சஹானா என்மீதான காதலில் உறுதியாக நின்றார். ” அவளின் இந்தப் பிரியம் அவளின் காதலை உணரவைத்தது. நானும் அவளை விரும்ப ஆரம்பித்தேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நிறம், சாதி, மதம், ஏற்றத்தாழ்வு, இவற்றையெல்லாம் கடந்து நிற்பதால்தான் காதல் என்று நாம் கேள்வி பட்டிருப்போம். இதோ அதற்கு சாட்சியாகி நிற்கிறது பிரணவ் – சஹானா திருமணம்!.
வாழ்த்துக்கள் மணமக்களே!