Categories
தேசிய செய்திகள்

டாடா சுமோ பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து….. 12 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று டாடா சுமோ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சமோலி காவல் கண்காணிப்பாளர் கூறியது, ஜோஷிமத் பகுதியில் இருந்து பல்லா ஜாகோல் சிற்றூருக்கு டாடா சுமோ வாகனத்தில் 17 பேர் சென்றனர். அவர்கள் சென்ற வாகனம் உர்கம் பகுதியில் 300 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

இதில் 3 பேர் காயமடைந்தனர். வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த போது அதிலிருந்து 2 பேர்‌ வெளியே குதித்து தப்பி ஓடினர். அதனைத் தொடர்ந்து வாகனத்தில் அளவுக்கு அதிகமான ஆட்கள் இருந்துள்ளனர். வாகனத்தின் மேற்கூரையிலும் சிலர் அமர்ந்துள்ளனர். இதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |