சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய எந்த சிரமமும் இருக்காது. அப்படி முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாவிட்டால் நிலக்கல் உள்ளிட்ட 13 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உடனடி முன்பதிவு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.