Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் “புத்தகக் கண்காட்சி”… நாளை ஆரம்பம்… அதிரடி உத்தரவுகளை வெளியிட்ட ஆட்சியர்…!!!

சேலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை(நாளை) புத்தக கண்காட்சி ஆரம்பமாகின்றது.

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் மாநகராட்சி திடலில் நாளை முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாசிப்பு பழகத்தை அதிகரிப்பதற்காக தமிழக அரசு சார்பாக புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு ஞாயிற்றுக்கிழமை(நாளை) திறந்து வைக்கின்றார். அதற்காக 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி காலை 9.30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறும். மேலும் கண்காட்சியை முன்னிட்டு தினமும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் சேலத்தைச் சேர்ந்த வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட புத்தகத்த தொகுப்புகளும் இடம்பெற இருக்கின்றது.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கண்காட்சியை பார்வையிடுவதற்காக ஒரு நாள் பணி நாளாக கருதி அனுமதி வழங்கப்படும். இதன் எதிரொலியாக புதிய பேருந்து நிலையத்தில் ஏர்ஹாரன்கள் ஒலிக்க தடை செய்யப்பட்டிருக்கின்றது. கண்காட்சி நடைபெறும் நாட்களில் பேருந்து நிலையம் அமைதி பேருந்து நிலையமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுபோலவே நான்கு ரோடு முதல் ஐந்து ரோடு வரை அமைதிச்சாலையாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |