பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பூ, மீனா, சம்யுக்தா, சங்கீதா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் சூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. மேலும் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.