தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் சிம்பு குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். நடிகர் சிம்பு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.
ஏனெனில் தன் மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவதால் சிம்பு மீது பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்தது. அதோடு சில காலங்களாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க உடல் எடை கூடி காணப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்துவிட்டு மாநாடு படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார் சிம்பு.
இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்பு ஒரு நடிகர் என்பதையும் தாண்டி பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பன்முக திறன்களை கொண்டவர்.
சிம்பு இயக்கத்தில் வெளியான மன்மதன் மற்றும் வல்லவன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2004-ம் ஆண்டு வெளியான மன்மதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மன்மதன் 2 படத்தை சிம்பு இயக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மன்மதன் 2 நடிகர் சிம்புவின் 50-வது திரைப்படமாக வெளிவர இருக்கிறது என்று கூறப்படுகிறது.