விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வீட்டுக்குள் 16 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், நிகழ்ச்சி 40-வது நாளை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ராபர்ட் மாஸ்டர் அழுது கொண்டிருக்கிறார்.
உடனே அசீம் பீல் பண்ணாதீங்க என்று மாஸ்டருக்கு ஆறுதல் கூறுகிறார். அந்த சமயத்தில் ரச்சிதா வந்து மாஸ்டரிடம் பேச முற்படுகிறார். அப்போது மாஸ்டர் நான் உன்னை நம்பினேன் அவனை நம்பினேன் யாரும் என்னிடம் பேச வேண்டாம் என்று அழுது கொண்டே முகத்தில் துணியை வைத்து மறைத்துக் கொண்டு கூறுகிறார். இதனால் ரச்சிதா அங்கிருந்து கோபமாக கிளம்பி சென்று விட்டார். மேலும் இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.