தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறாத நிலையில், ஜெயிலர் படத்தை ஹிட் ஆக்கி விட வேண்டும் என்ற முனைப்போடு நெல்சன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் அண்மையில் வெளியானது.
ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பற்றிய நிலையில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை தற்போது பட குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வயசானாலும் ரஜினியின் நடை உடை ஸ்டைல் எதுவுமே மாறவில்லை எனவும் தலைவர் தீயாக இருக்கிறார் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Here’s a glimpse of Superstar @rajinikanth from the sets of #Jailer 🤩
@Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/3EtAap0FUs
— Sun Pictures (@sunpictures) November 18, 2022