Categories
தேசிய செய்திகள்

இவ்வளவு பேரா?… இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்….!!!

கடந்த ஆண்டு  வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2020 ஆண்டு முதல் 2021 -ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வங்காளதேசத்திலிருந்து 2.40 லட்சம் பேரும், இங்கிலாந்தில் இருந்து 1. 64 லட்சம் பேரும், கனடா, நேபாளம் நாடுகளில் இருந்து 80.437 பேரும், அமெரிக்காவிலிருந்து 4.29 லட்சம் பேரும் வந்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 74.39 சதவீதம் பேரும் வந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |