Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்கள் உயர் கல்வி முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தங்கள் கல்லூரிகளின் முதல் ஆண்டில் விண்ணப்பிக்கலாம். தற்போது 2,3,4ஆம் ஆண்டு படித்து வரும் மாணவிகளும் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறு இருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மாதாமாதம் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக உதவித்தொகை வழங்கப்படும். மாணவிகள் விண்ணப்பிக்க www.pudhumaipenn.tn.gov.in  என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |