வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருந்தாலும் கூட அதற்கெல்லாம் மதிப்பு கொடுக்காமல் கிம் ஜாங் அன் அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அமெரிக்காவைத் தாக்கும் விதமாக நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணையை வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் வைத்து பரிசோதனை செய்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த சோதனையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணையை பயன்படுத்தியிருக்கலாம் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.