Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதம் குறைவு…. எந்த பேங்கில் தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

அதிகரித்து வரக்கூடிய பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியானது சென்ற சில மாதங்களில் ரெப்போ விகிதத்தை 4 முறை அதிகரித்துள்ளது. இதனிடையில் வீட்டுக் கடனை எதிர்பார்க்கும் தனிநபர்களுக்கு நல்ல செய்தியாக நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய பாங்க் ஆப் பரோடா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. நவ..14ஆம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இவ்வங்கி அதன் வீட்டுக் கடனுக்குரிய வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இதுகுறித்து பாங்க் ஆப் பரோடா வங்கியானது, தேர்வுசெய்யப்பட்ட கடன் வாங்குவோருக்கு வீட்டுக்கடனை 0.25% குறைத்திருப்பதாக குறிப்பிட்டு உள்ளது.

வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அடிப்படை புள்ளிகள் 25 bps குறைக்கப்பட்டு வருடத்திற்கு தற்போது 8.25 சதவீதத்திலிருந்து துவங்குகிறது. அத்துடன் BoBன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இப்போது 8.25% ஆக உள்ள நிலையில், எஸ்பிஐ மற்றும் HDFC வழங்கும் வீட்டுக்கடன் வட்டி விகிதம் 8.40% ஆக உள்ளது. புது வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு விகிதமானது கிடைக்குமென அந்த வங்கி தெரிவித்து உள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி வட்டிவிகிதம் வருகிற டிசம்பர் 31, 2022 வரை கிடைக்கும் என வங்கி கூறி இருக்கிறது.

Categories

Tech |