கொங்கு மண்டலத்தில் இடம்பெற்ற முக்கிய நகரம் ஈரோடு மாவட்டம். அங்கிருந்து அக்ரஹாரம், ஆர்என்.புதூர், லட்சுமி நகர், பவானி, அம்மாபேட்டை, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் செல்ல மேட்டூர் மெயின் ரோடு பிரதான சாலையாக அமையும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழிதடத்தில் தினசரி நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கரம் மற்றும் கனரக வானங்கள் சென்று வருகிறது. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக மாறி உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் ஈரோடு முதல் பெங்களூர் வரை செல்ல முடியும். இதில் நாளைக்குள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. எனவே தோப்பூர், மேட்டூர், பவானி, ஈரோடு ஜீரோ பை ஜீரோ வரை 7 மீட்டராக உள்ள தார் சாலையை 10 மீட்டர் அகலம் கொண்டதாக மாற்ற முதல் கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாலையின் இரு பகுதியிலும் மொத்தம் 3 மீட்டர் அகலம் ஏற்படுத்தக்கூடிய வகையில் கடின புருவல்கள் கொண்ட தார் சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தொப்பூரில் தொடங்கியது. தற்போது பவானி, குப்பிச்சிபாளையம், பெரும்பள்ளம், பிளாட்டினம் மஹால் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தனித்தனி ஒப்பந்ததாரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிலும் மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள இருபுறம் வளர்ந்துள்ள புளிய மரங்கள் அப்புறப்படுத்தாமல் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் பவானி நகரப் பகுதியில் உள்ள மேட்டூர் மெயின் ரோட்டில் இடையூறாக உள்ள மரங்கள் கண்டறியப்பட்டு அவை அப்புறப்படுத்தப்பட்டு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அனைத்து விரிவாக்க பணிகளும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளது. பவானி முதல் சின்னப்பள்ளம், பிளாட்டினம் வரை பணிகளுக்கு ரூ.85 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. மேட்டூர் மெயின் ரோட்டில் சிறிய பாலங்கள் 45, பெரிய பாலங்கள் 2, புதிய படங்கள் 2 மொத்தம் 49 பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவுக்கு வந்தவுடன் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விபத்துகளும் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.