எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக்கூடிய லிவிங் டுகெதர் உறவு முறை அதிகரித்து வருகிறது. புதிய தலைமுறை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு திருமணம் தடையாக உள்ளது. பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் திருமணங்களை பாதித்து வருகின்றது. இதில் ஒரு சிலரே லிவிங்க் டுகெதர் இல் இருந்துவிட்டு பின் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு பெண்களே பொறுப்பு என மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.
மெத்தப் படித்த பெண்கள் லிவிங் டுகெதர் மாதிரியான பெற்றோருக்கு பிடிக்காத உறவுகளில் இருக்கக்கூடாது என அவர் அறிவுறுத்தி உள்ளார். படுகொலை செய்யப்பட்ட பெண்ணையே குற்றம்சாட்டும் அமைச்சருக்கு கண்டனங்களும் வந்துள்ளது.