திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களுடன் பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திருநெல்வேலியில் 12 வட்டாரங் களுக்கு தேர்தல் நடத்தவில்லை. அதற்கு பதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பணத்தை வாங்கிக்கொண்டு கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வட்டார தலைவராக நியமித்துள்ளார்.
இது தொடர்பாக முறையிட சென்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை கடந்த 15-ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் வைத்து கே.எஸ் அழகிரி அவருடைய அடியாட்களை வைத்து பயங்கரமாக தாக்கியுள்ளார். அதன் பிறகு ரூபி மனோகரன் மற்றும் கே.எஸ் அழகிரிக்கு இடையை எவ்வித பிரச்சினையும் இல்லை. சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்குமுறை கூட்டமானது வருகிற 24-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தின் போது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்களையும் அழைத்து விசாரணை நடத்த வேண்டும்.
அதோடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பதற்கு கே.எஸ் அழகிரிக்கு அருகதை இல்லாத காரணத்தினால் அவரை உடனடியாக பதவியில் இருந்து விலக வலியுறுத்திக் கொள்வதோடு, மேல் இடத்திற்கும் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளோம். அதோடு நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமாரும் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும். எங்களுக்கு சத்தியமூர்த்தி பவனில் நுழைவதற்கு பயமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்குள் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே கே.எஸ் அழகிரி பதவி விலகாவிடில் நெல்லை மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் போராட்டம் நடத்துவோம்.
இது போன்ற ஒரு மாநில தலைவர் எங்கேயும் இருந்ததே கிடையாது. இவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துக் கொள்கிறோம். கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வட்டார தலைவராக நியமித்து உள்ளார்கள். மேலும் கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஒருவருக்கு நெல்லை மாவட்டத்தில் பதவி வழங்கி இருப்பதற்கும் நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.