சி.ஏ.ஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கறிஞ்சர் கோபிநாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் அனுமதி இல்லாமல் CAA போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று தமிழக DGPக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் , கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் போராட்டம் நடத்துபவர்கள் சார்பில் அமைதியாக போராடிவரும் தங்களின் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் , இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டுமென்றும் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 11ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதுவரை வரை அனுமதியின்றி போராட்டம் நடத்துவோரை அப்புறப்படுத்தும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.