தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இந்த படம் நடிக்க தொடங்கியதில் இருந்து தற்போது வரை நயன்தாராவின் மார்க்கெட் குறையவே இல்லை. பல வருடங்களாக முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கும் நயன்தாரா ஒரு படத்திற்கு திருமணத்திற்கு முன்பு வரை 4 கோடி முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த நிலையில், தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு படத்திற்கு சம்பளமாக ரூபாய் 10 கோடி வரை கேட்கிறாராம். இந்நிலையில் நயன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள படத்திற்கு 35 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளாராம்.
இந்த 35 நாட்களுக்கு மட்டும் ரூபாய் 10 கோடி வரை சம்பளம் கேட்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதோடு படத்தில் நடிக்கும் போது தன்னுடைய தாலியை கழட்ட மாட்டேன் மற்றும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என பல கண்டிஷன்களையும் போட்டு வருகிறாராம். மேலும் நடிகை நயன்தாராவுக்கு சமீபத்தில் வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.