தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து 3-வது முறையாக எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, உங்களை சிறப்பாக செயல்பட தூண்டுபவர்களை எப்போதும் உங்களை சுற்றி வைத்திருப்பதோடு, உயர்ந்த இலக்கு மற்றும் உந்துதலோடு இருங்கள். நல்ல நேரம் மற்றும் நேர்மையான ஆற்றல். பொறாமையோ வெறுப்போ வேண்டாம். ஒருவருக்கொருவர் உங்களுக்குள் இருக்கும் சிறப்பை வெளிக்கொண்டு வாருங்கள். வாழு, வாழ விடு மற்றும் நிபந்தனையற்ற அன்புடன் நடிகர் அஜித் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
— Suresh Chandra (@SureshChandraa) November 17, 2022