இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் வருகின்ற 2024 -ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக தற்போது இருந்து ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று குர்னூலில் நடைபெற்ற கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. நமது மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது மிகவும் முக்கியம். எனவே நான் எதிர்காலத்தில் நமது மாநிலத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் போராடுவேன்.
இந்நிலையில் நமது மாநிலத்தின் நிலைமையை மேம்படுத்தவும், நலத்திட்டங்களை உருவாக்கவும் நான் பணியாற்றுவேன் . இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எனது மனைவியை காங்கிரஸ் கட்சியினை அவமரியாதையாக நடத்தினர். எனவே நான் நமது மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழைய போவதில்லை எனவும், அதையும் மீறி தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.