படப்பிடிப்பு தளத்தில் பிரபல ஹீரோ மயங்கி விழுந்துள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சவுர்யா. இவர் தற்போது அருணாச்சலம் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்தபின் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாவது, இவர் இந்த படத்திற்காக தனது உடலை சிக்ஸ்பேக் வைப்பதற்காக கடுமையான பயிற்சிகளை செய்து வருகின்றார். மேலும் தண்ணீர் இல்லாத டயட் உணவுகளை சாப்பிட்டு வருவதால் இவருக்கு நீர் இழப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார் என கூறப்படுகின்றது. இவருக்கு இன்னும் இரண்டு நாட்களில் பெங்களூருவில் திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் இவர் படத்திற்காக உடலை வருத்திக் கொண்டுள்ளார். இதையறிந்தவர்கள் புதுமாப்பிள்ளை இப்படி செய்யலாமா என கேட்டு வருகின்றார்கள்.