Categories
தேசிய செய்திகள்

அலட்சியம் காட்டிய போலீஸ்…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்….. பரபரப்பு புகார்….!!!!

மகாராஷ்டிரா மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர், தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணை சில பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அந்த வாலிபர் 4 முறை கடிதம் எழுதி உள்ளார்.

அப்போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மனமுடைந்த இளைஞர் மும்பையிலுள்ள அரசு கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் இடையில் கட்டப்பட்டிருந்த வலையில் சிக்கித்தவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாலிபரை பாதுகாப்பாக மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

வாலிபர் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் என்ன என்பது பற்றி அரசு அலுவலக கட்டிடத்தில் இருந்த அதிகாரிகள் சிலர் கேள்வி எழுப்பினர். அப்போதுதான் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண்ணை சில பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்த வாலிபர் குறிப்பிட்டார்.

Categories

Tech |