சாண்டி மாஸ்டர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காஜல் பசுபதி இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சென்ற 2012 ஆம் வருடம் இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள். இதன்பின் சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சாண்டி மாஸ்டருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் காஜல் பசுபதி தனது முன்னாள் கணவர் சாண்டி வீட்டிற்கு நேரில் சென்று பேசியதோடு செல்பி எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சாண்டியின் இரண்டாவது மனைவியை டார்லிங் என குறிப்பிட்டு இருவரையும் வாழ்த்தி இருக்கின்றார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்திருந்தாலும் பொது இடத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் கூறியதும் இல்லை, விட்டுக் கொடுத்ததும் இல்லை.