சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ரீல்ஸ் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக ரீல்ஸூக்காக நேரம் செலவிடுபவர்களின் எண்ணிக்கையானது இன்றைய உலகில் அதிகமாகி விட்டது. அப்படிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கப்பட்டால் அதை மீட்பது எப்படி..? என்பதை தெரிந்துக்கொள்வோம். அதாவது சமூக வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படலாம்.
அத்துடன் பாலியல் செயல்பாடு குறித்த வீடியோக்கள், கன்டென்டுகள், கிராபிக் வன்முறை, ஸ்பேம், துஷ்பிரயோகம், பயங்கரவாதம் ஆகிய குற்றங்கள் தொடர்பான போஸ்டுகளுக்காக தடைசெய்யப்படலாம். உங்களது லைக் மற்றும் பாலோ வாயிலாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்படும். அவ்வாறு முடக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்பதற்கு, இன்ஸ்டாகிராம் ஹெல்ப்லைனை தொடர்புகொள்ளவும்.
பின் அங்கு கொடுக்கப்படும் படிவத்தை பூர்த்திசெய்து அப்பீல் செய்யலாம். அவற்றில் மீண்டும் கிடைக்கவில்லை எனில், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மறுசீரமைக்கப்படுவது குறித்த விண்ணப்பத்தை அளிக்கவேண்டும். இதுபோல் பல வழிமுறைகள் முடகப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்பதற்கு உள்ளது. சரியான காரணத்தையும், அதற்கான படிவத்தையும் கொடுத்து விண்ணப்பிக்கும் பட்சத்தில் உங்களது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மீண்டுமாக கிடைக்கும்.