மதுரை மற்றும் வாரணாசி இடையே பாரத் கவுரவ் யாத்திரை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அனைத்து இடங்களையும் மக்கள் அனைவரும் கண்டு களிக்கும் விதமாக பாரத் கௌரவ் ரயில் திட்டம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. யாத்திரை ரயில்களை மட்டும் ரயில்வே இயக்கி வரும் நிலையில் இதர சேவைகளை தனியார் மூலமாக வழங்கி வருகிறது.
இந்நிலையில் மதுரை மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி இடையே பாரத் கௌரவு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி மதுரையில் இருந்து நாளை காலை 8.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நவம்பர் 22ஆம் தேதி இரவு 7 மணிக்கு வாரணாசி சென்றடையும். வாரணாசியில் இருந்து நவம்பர் 23ஆம் தேதி காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சென்னை மற்றும் மதுரை வழியாக நவம்பர் 28ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் மௌலாலிக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.