உக்ரைன் ரஷ்யாவின் மீதான படையெடுப்பு போல தைவான் மீதான தாக்குதல் சீனாவிற்கு தவறானதாக அமைந்து விடும் என அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மில்லி கூறியுள்ளார். இது பற்றி ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மில்லி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தைவானின் பெரும் பகுதி மலைப்பாங்கான தீவு. அதனால் தைவான் ஜல சந்தியின் குறுக்கே தைவானை தாக்குவதும் முற்றுகையிடுவதும் மிகவும் கடினமான வேலையாகும். மேலும் “இது மிகவும் கடினமான ராணுவ நோக்கம். சீனர்களுக்கு இதில் அதிகமான ஆபத்தும் இருக்கிறது”. அதனால் தைவான் மீதான தாக்குதல் ஒரு புவிசார் அரசியல் பிழையாக இருப்பதனால் புதின் உக்ரைனில் செய்ததைப் போல், அது ஒரு மூலோபாய தவறாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
Categories
தைவான் மீதான தாக்குதல்… “இது தவறானதாக அமையும்”…? பிரபல நாடு எச்சரிக்கை…!!!!!
