தமிழகத்தை சேர்ந்த பல தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களும் தாய்லாந்து,மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உள்ளதாக பல முகவர்கள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு அதிக ஊதியம் என்று ஆசை வார்த்தை பேசி சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்கிறார்கள். இவற்றை நம்பி வெளிநாடு செல்லும் இளைஞர்களை சிலர் கால் சென்டர் மற்றும் கிரிப்டோ கரன்சி போன்ற பணிகளில் ஈடுபடுத்தி துன்புறுத்துகின்றனர். எனவே இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனால் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இளைஞர்கள் அனைவரும் மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா,முறையான பணி ஒப்பந்தம் மற்றும் பணியின் தன்மை உள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி விவரங்கள் தெரியாவிட்டால் சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை 9600023645, 044-28515288 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.