தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்றால் அது இயக்குனர் சங்கர் தான். அந்த அளவுக்கு இயக்குனர் சங்கரின் படங்களில் பிரம்மாண்டம் என்பது இருக்கும். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் ஆர்சி 15 திரைப்படம் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இந்த படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க, கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக நியூசிலாந்தில் ஒரு பாடல் காட்சியை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் படமாக்கும் பாடலுக்கு சுமார் 15 கோடி பட்ஜெட் என்று ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது ஒரு பாடலுக்கு மட்டும் சுமார் 15 கோடி பட்ஜெட் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் சும்மாவா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.