Categories
தேசிய செய்திகள்

“மதம் மாற்றம் செய்கிறார்களா”…? மனைவியை வற்புறுத்திய கணவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!!

பெங்களூரில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை மத மாற்றம் செய்ய வற்புறுத்தியுள்ளார்.

பெங்களூரில் உள்ள தர்பார் மாவட்டம் உப்பள்ளி டவுன் என்னும் பகுதியில் சிக்கலிகர் சமூக மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் அவர் மதம் மாறாவிட்டால் தன்னுடன் வாழக்கூடாது என தெரிவித்துள்ளார்.  இது பற்றி அந்தப் பெண்  தனது சமூகத்தை  மக்களிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பழைய உப்பள்ளி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, மத போதகர்கள் மற்றும் ஒரு ரவுடி உட்பட 15 பேர் தொடர்ந்து அந்த பகுதி மக்களை சந்தித்து கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்ததது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார்  15 பேரையும்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |