தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் போதுமான அளவு இல்லாததால், ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமன்னா மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியானது. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை தமன்னா instaவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு படத்தில் தான் ஆண் வேடம் அணிந்திருந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதன் பிறகு கவர்ச்சியான புடவை அணிந்த ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதோடு என்னுடைய பிஸ்னஸ் மேன் கணவரை அறிமுகப்படுத்துகிறேன். திருமண வதந்திகள் மற்றும் என்னுடைய வாழ்க்கை பற்றி கதை எழுதும் ஒவ்வொருவருக்கும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவின் மூலம் நடிகை தமன்னாவின் திருமணம் குறித்த தகவல்கள் முற்றிலும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.